பங்குதந்தைகோவளம்
11-05-1962 -- 19-05-1973.
ராசாக்க மக்கலம் துறையில் பிறந்த இறைத்தொண்டர்....
மறைந்தாலும் மறையாத புகழ் கொண்ட ...
மறைதிரு. ம.ஆண்ட்ரூ செல்வராஜ் அடிகளார் மறைந்த முதலாம் ஆண்டில்...
அவரின் நினைவைப் போற்றுகிறோம்...
எங்கள் கோவளம் புனித லயோலா இஞ்ஞாசியார் பங்கில், தனது முதல் பங்கு பணித்தளமாக இருந்தபோதிலும் பதினோரு ஆண்டுகள்(1962-1973) திறம்பட செயல்பட்டு நீண்டகாலம் அருட்பணி செய்து, எங்கள் ஊரில் ஆன்மீக மற்றும் அடிப்படை வளர்ச்சிக்கு மிகமுக்கிய காரணமாக இருந்தவர்.
மணல் தேரிகளாக இருந்த கோவளம் ஊரின் மேற்குப் பகுதியை வாகன பயணம் செய்வதற்கு வசதியாக எங்கள் ஊர் மக்களைக் கொண்டே செப்பனிட்டதன் மூலம் போக்குவரத்து சீராக நடைபெறுவதற்கு அடிகளார் அவர்கள் ஆற்றிய பணிகள் மகத்தானது.
எங்கள் கோவளம் ஆலயத்தின் இன்றைய எழில்மிகு கோபுரத்தை கட்டியெழுப்புவதற்கு பெருந் தொண்டாற்றியது மட்டுமின்றி தற்போதைய திருப்பலி பீடம் புனரமைக் கப்படுவதற்கும் காரணமாக இருந்தவர் அருட்தந்தை ம.ஆண்ட்ரூ செல்வராஜ் அடிகளார் ஆவார்.
அருட்தந்தையவர்கள் தனது பணிக்காலத்தில் கோவளம் பங்கின் கிளைப் பங்கான கொட்டாரம் புனித யூதா ததேயு பங்கின் புதிய ஆலய கட்டுமான பணிக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் சிறப்பான பணிகளைச் செய்தார்.
ஆன்மீகப் பணியோடு கல்வி மற்றும் கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோவளம் பங்கு மக்கள் சிறந்து விளங்க உதவியாக இருந்தார். மொத்தத்தில் கோவளம் பணித்தளத்தின் ஆன்மீக வரலாற்றில் அருட்தந்தை ம.ஆண்ட்ரூ செல்வராஜ் அவர்களின் திருப்பணி என்றும் எவராலும் மறக்க முடியாதவை.
அவர் மறைந்த முதலாம் ஆண்டில் எங்களின் நெஞ்சத்து நினைவுகளால் அஞ்சலி செலுத்துகிறோம்.
எல்லாம் வல்ல இறைவன் அவரது ஆன்மாவுக்கு நித்திய இளைப்பாறுதல் அளிக்க இறைவனிடம் வேண்டுகிறோம்...!
நன்றியுடன்...
T.பயஸ் பாக்யராஜ் M.A.M.Phil & குடும்பத்தினர்.
கோவளம்.