தந்தையை பற்றி Fr கிறிஸ்டோ MMI
அருட்பணி ஆண்ட்ரு ம.செல்வராஜ் அவர்களுக்கு
அர்ப்பணிப்பு அஞ்சல்
ராஜாக்கமங்கலம்த்துறை பெற்றெடுத்த முத்தே!
கோட்டாறு மறைமாவட்டத்தின் சொத்தே!
ஆண்டவரின் பணியில் அயராத உழைப்பே!
உம் வாழ்வில் நீர் கண்ட சிறப்பே!
அனுதின ஜெபமே!
உம் வாழ்வின் உயிர் மூச்சே!
உம் அன்பால் எம்மை ஆட்கொண்ட ஆசானே!
உம் பண்பால் எம்மை பக்குவப்படுத்திய பண்பாளனே!
எம் வாழ்வில் ஒளி ஏற்றிய அருள் ஜோதியே!
இறை பாதையில் எம்மை பயணிக்கவைத்த நல்வழி காட்டியே!
தடைவரின் தாண்டிச்செல் என தட்டிக்கொடுத்தீரே!
துன்பம் வந்தபோது துணிந்துநில் என துணையாக நின்றீரே!
ஆரவாரம் இல்லாத அயராத உழைப்பே உம் வாழ்வு!
அதைக்கண்டு நாளும் வழி நடந்திட செய்தீரே!
உம் வாழ்வு எமக்கு ஒரு பாடபுத்தகமே - அதை
நாளும் படித்திட எமக்கு வாய்ப்பளித்தீரே!
அமைதியுடன் அனைத்து பணிகளையும் செய்தீரே!
அன்பை மட்டுமே அணிகலனாக கொள் என்றுரைத்தீரே!
எம் MMI க்கு கடவுள் தந்த பரிசே - நீர்
என்பதை என்றும் எம் மனதில் மறப்பதில்லை.
உம் கண்டிப்பிலும் ஒரு கருணை உண்டு - அதை
பாடமாகவும் கற்றுத்தந்தீர் - உம் வாழ்வில்
வாழ்ந்து காட்டிய அன்புத்தந்தையே!
மறையவில்லை உம் பாதைகள்!
நீர் எங்களிடமிருந்து மறைந்தாலும்
மறையாத உம் போதனைகள்
உம்மை காணவில்லை என்றாலும்
கடலலை போன்ற எம்மனதில் நினைவலைகள்!
இறுதியில் இறைவனில் இளைப்பாற்றி அடைவதே
உம் விருப்பம் - அதை
இறைவன் பரிசாகக்கொடுத்து
உம்மை வான்வீட்டில் அழகுபடுத்தினாரே!
Fr கிறிஸ்டோ MMI