பங்குதந்தைகுலசேகரம்

20-05-1973 -- 29-11-1980.

அனைத்து வீடுகளுக்கும் கழிவறை வழங்கும் திட்டம்,(இலவசம்)
ஆடு வளர்ப்புத் திட்டம் (இலவசம்)
அன்னை எமின் நூலகம் அமைத்தது.
அனைத்து இல்லங்களும் சந்தித்து ஜெபித்தது.

பணியாற்றிய காலத்தில் குலசேகரம் பங்கின் கிளைகள்:
நாகக்கோடு,கோதையார்,பேச்சிப்பாறை,கோட்டூர்கோணம்,பாய்க்காடு,ஈஞ்சக்கோடு,அரமன்னம்,இட்டகவேலி,
மணலோடை,பொன்மனை.

கல்வி விழிப்புணர்வு முக்கியமான பணியாகும்;அதற்கான உதவிகள் வழங்கல்,குடும்பநல இயக்கம் சிறப்பாக செயல்பட்டது;கலைக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு அதற்கான உபகரணங்களான ஆர்மோனியம்,சித்தார்,தபலை,ரம்செற்,டோலாக்கு,மேடைநாடகத்துகு தேவையான திரைச்சீலைகள் அவர் காலத்தில் வாங்கப்பட்டு இசைப் பயிற்சி வழங்கப்பட்டது;அவர் சென்று 42-வருடங்கள் ஆகிறது அவரது காலம் குலசேகரத்தின் பொற்காலம்.விளையாட்டை ஊக்கப்படுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான்;தலைக்கனம் இல்லாத அருட்பணியாளர்;போலி வேடம் போடத் தெரியாதவர்;கோபத்தை யாரிடம் கொட்டுகிறாரோ அவர்களின் நலனில் அதீக அக்கறை எடுத்துக் கொள்வார்;காலம் போற்றும் உன்னத மனிதர்;குலசேகரம் அவரை என்றும் மறக்காது.
குலசேகரம் வட்டார ஐக்கிய கிறிஸ்தவ அமைப்பை உருவாக்க காரணமானவர்;RC,மலங்கரை சபை,CSI சபை,சவந்டே சபை,ரெட்சனியசேனை சபை,யாக்கோபா சபை,மார்த்தோமா சபை,லுத்தரன் சபை,இன்னும் சில பெந்தகோஸ்து சபைகள் உள்ளடக்கிய ஐக்கிய கிறிஸ்தவ கூட்டமைப்பு வருடம் தோறும் (கிறிஸ்மஸ் அன்று)குலசேகரம் RCஆலயத்திலிருந்து கல்லடிமாமூடுவரை நான்கு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று ( பாடல்கள் பாடி) கொண்ண்டாடி மீண்டும் தொடங்கிய இடத்தில் கலைநிகழ்ச்சி,மற்றும் நல உதவி திட்டங்கள்,இலவச திருமணம் (துவக்கத்தில் ஐந்து ஏழைகளுக்கு) திரிமணத்தோடு நிகழ்ச்சிகள்நிறைவடையும். இன்றும் அதை நினைத்தால்(ஆயிரக்கணக்கான ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,குழந்தைகள் பங்கேற்பார்கள்) உள்ளத்தில் கொண்டாட்டம் பிறக்கிறது.

அகஸ்டின்
குலசேகரம்.

Image

of